search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாபாஸ் ஷரீப்"

    ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் தம்பியும், பாக். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷரீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #ShehbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரீப், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்டத்தில் விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் அளித்ததாக புகார் இருந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பியான இவர் இன்று திடீரென தேசிய பொறுப்புடைமை துறை அதிகாரிகளால் லாகூரில் கைது செய்யப்பட்டார்.

    ஏற்கனவே, நவாஸ் ஷரீப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பின்னர் பதவியை இழந்து சமீபத்தில் அவரது தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆதாரத்தின் அடிப்படையில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலையிடாது என இம்ரான் கான் அரசில் செய்தி தொடர்பு துறை மந்திரியாக உள்ள பாவத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். #ShahbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவராக ஷாபாஸ் ஷரீப்பை நியமனம் செய்ய 111 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என பாராளுமன்ற சபாநாயகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
    ×